கொலம்பியாவில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில், ஏழு பேர் இறந்தனர். தென் அமெரிக்க நாடான, கொலம்பியாவில், ராணுவ ஹெலிகாப்டரில், நேற்று காலை, ௧௦ பேர் சென்றனர்.
கொலம்பியாவின் வடமேற்கு பகுதியில் பறந்த போது, அந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இதில், ஏழு பேர் இறந்தனர்.
மேலும், மூன்று பேரின் நிலை தெரியவில்லை.இறந்த ஏழு பேரில், பைலட் உட்பட நான்கு பேர், ஹெலிகாப்டர் ஊழியர்கள்; இருவர், ராணுவ விமான பெட்ரோல் பராமரிப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் என, ராணுவத்தினர் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் பற்றி, கொலம்பிய ராணுவம் விசாரிக்கிறது.