‘குலாநந்தன்’ என்ற ஒடியா படத்தில் அறிமுகமாகி 150-க்கும் மேற்பட்ட படங்களில் பாடி தனது இனிமையான குரலில் அனைவரையும் பரவசப்படுத்தியவர் பாடகி தபு மிஷ்ரா.
ஒடிசாவில் புகழ் பெற்ற சினிமா பின்னணி பாடகியாக வலம் வந்தவர், தபு மிஷ்ரா (வயது 36). இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில், அதற்கு பிந்தைய பாதிப்புகளால் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ந் தேதி சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த வாரம் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், 2 நாட்களாக வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
‘குலாநந்தன்’ என்ற ஒடியா படத்தில் அறிமுகமாகி 150-க்கும் மேற்பட்ட படங்களில் பாடி தனது இனிமையான குரலில் அனைவரையும் பரவசப்படுத்திய பாடகி தபுவின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாடகி தபு மிஷ்ராவின் தந்தை கடந்த மாதம் 10-ந் தேதி கொரோனாவுக்கு பலியான நிலையில், தற்போது தபு மிஷ்ராவும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் மரணமடைந்திருப்பது அவர்களுடைய குடும்பத்தினரை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.