நாட்டில் நேற்றைய தினம் 2,584 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களுள் 2,572 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளனர்.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்த 12 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 174,861 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை, 29,747 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 1,411 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
இதன்படி தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 143,789ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர், கொவிட்-19 தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை கட்டுப்பத்தப்படக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையாகும் நடமாட்டக் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் என்பனவற்றுக்கு மத்தியில், இந்த அனுமானத்திற்கு வரமுடியும் என சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.