சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 124 பேர் குணமடைந்துள்ளதாக மகிழ்ச்சியான தகவலொன்று வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த நோயாளர்கள் வெற்றிகரமாக சிகிச்சை பெற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் வுஹான் நகரில் இருந்தே குறித்த வைரஸ் பரவியதாக தெரிவிக்கப்படும் நிலையில் தற்போது அங்கு 124 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவில் நோய் தொற்றுக்கு இலக்கான 4 ஆவது மற்றும் 5 ஆவது நோயாளர்கள் இருவரும் இவ்வாறு குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர்கள் நிமோனியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் தத்தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளஅவர்கள் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளமையும் இங்கு குறிப்பிடதக்கது.