தீவிர கொரோனாத் தொற்று பாதிப்பிலிருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களில் பலருக்கு அவர்களுடைய சருமத்தில் ஹெர்ப்ஸ் (Herpes) மற்றும் கேண்டிடா ( candida ) உள்ளிட்ட சில சரும பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, தீவிரமடைந்து அதிலிருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு சரும பாதிப்பு, தலைமுடி உதிர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா தீவிர தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு தோல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுகிறது. எம்மில் சிலருக்கு பல ஆண்டுகளுக்கு முன் இத்தகைய ஹெர்ப்ஸ் எனப்படும் சரும பாதிப்பு ஏற்பட்டு, குணமடைந்திருக்கும். அவை உடலிலேயே தங்கி இருக்கும். இந்த தொற்று சிலருக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வேறு சிலருக்கு முதன் முறையாக இத்தகைய தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இந்த தொற்று பாதிப்பு உருவானால் வாய் அல்லது பிறப்புறுப்பு பகுதியை சுற்றிலும் புண்கள் ஏற்படும். எரிச்சல் அதிகமாக இருக்கும். வேறு சிலருக்கு கேண்டிடா என்ற பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. இத்தகைய தொற்றின் காரணமாக இயல்பான அளவைவிட கூடுதலாக முடி உதிர்தல், விரல் நகங்களில் வெள்ளை மற்றும் பிரவுன் வண்ண கோடுகள் உருவாவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
கொரோனாத் தொற்று பாதிப்பின் போது பயன்படுத்தும் அதிகளவு ஸ்டீராய்ட் மருந்துகள் காரணமாகவும், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் குறைவின் காரணமாகவும் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆனால் இவற்றுக்கு முழுமையான நிவாரண சிகிச்சை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
http://Facebook page / easy 24 news