கொப்புள புண்களை உண்டாக்கும் ஒருவகை தோல் நோய்க்கான தடுப்பூசி வயோதிபர்களிற்கு இலவசம்.
கனடா-ரொறொன்ரோ 65 வயதிற்கும் 70 வயதிற்கும் இடைப்பட்ட வயோதிபர்கள் shingles எனப்படும் கொப்புள புண்களை உண்டு பண்ணும் ஒருவகை தோல் நோய்க்கான தடுப்பூசியை இலவசமாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிபரல் அரசாங்கம் 3-வருடங்களிற்கு இத்தடுப்பூசிக்காக 68மில்லியன் டொலர்களை செலவிடுகின்றது. தகுதி பெறும் வயோதிபர் ஒருவர் இதன் மூலம் கிட்டத்தட்ட 170டொலர்களை சேமிக்கலாம்.
தடுப்பூசி போடுவதால் வயோதிபர்கள் வயதான காலத்தில் வேதனையான தொற்று மற்றும் வைத்தியசாலைக்கு செல்தல் போன்றனவற்றை குறைக்கலாம் என சுகாதார அமைச்சர் எறிக் கொஸ்கின் தெரிவித்தார்.
ஒன்ராறியோவில் ஒவ்வொரு வருடமும் இந் நோயினால் 42,000ற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நோயினால் பலதரப்பட்ட சிக்கல்கள்-பார்வை இழப்பு மற்றும் நரம்பு வலி போன்ற பல சிக்கல்கள் ஏற்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை பாதுகாப்பு மருத்துவர் அல்லது செவிலிய பயிற்சியாளரிடம் இத்தடுப்பூசியை வயோதிபர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கிட்டத்தட்ட 850,000 வயோதிபர்கள் தடுப்பூசி பெற தகுதி பெறுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.