கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தாலுடன், போராட்டமும் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வெள்ளிக்கிழமை (28) போராட்டம் மற்றும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும், யாழ்ப்பாண வணிகர் கழகம், தனியார் பேரூந்து நிலைய உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கம், வியாபார ஸ்தாபனங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் ஆகியன இணைந்து இன்றையதினம் பூரண ஹர்த்தலுக்கு ஆதரவு செலுத்தியுள்ளன.
யாழ்ப்பாண மாநகர பகுதிகளிலும் வியாபார நிலையங்கள், அங்காடி கடைத்தொகுதிகள் என்பன பூட்டப்பட்டு இருந்ததன. ஹர்த்தலுக்கு ஆதரவு செலுத்தும் வகையில் தனியார் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.