விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வுப் பிரிவினரால் ராகமை பொலிஸ் பிரிவில் பட்டுவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையிட்ட சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரொருவரே கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர் 43 வயதுடைய கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். கடவத்தை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.