நெதர்லாந்து நாட்டில் உள்ள சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் மற்ற நாடுகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளது அந்நாட்டு அரசு.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் குற்றச்செயல்களில் ஈடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதனால், அந்நாட்டில் ஏற்கனவே உள்ள சிறைச்சாலைகள் யாருமில்லாமல் காற்றாடி வருகின்றன. இதனால், சிறை வளாகத்தை பல்வேறு பணிகளுக்கு அரசு பயன்படுத்தி வருகின்றது. குறிப்பாக முன்னாள் பெண்கள் சிறைச்சாலை ஒன்று, தற்போது உணவு விடுதியாக செயல்படுகின்றது. அந்நாட்டில் உள்ள பிரேடா சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 90 அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் செயல்பட்டு வருகன்றன.
2014-ம் ஆண்டு குற்றங்கள் பெருமளவு குறைக்கப்பட்டு குற்றவாளிகள் இல்லாத காரணத்தால் 27 சிறைச்சாலைக்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றில் 6 சிறைச்சாலைகள் 17 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒரு சிறைச்சாலை நார்வே கைதிகளை அடைப்பதற்காக வாடகைக்கு விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.