முன்பு எல்லாம் சாட்டிலைட் ரைட்ஸ் மூலம் தயாரிப்பாளர்களுக்கு பெரும் தொகை கிடைத்து வந்தது. சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தமிழ்ப்படங்களின் சாட்டிலைட் ரைட்ஸ் பெரிய விலைக்குப்போனது.
அதன் பிறகு சேனல்களுக்கு இடையே சிண்டிகேட் அமைக்கப்பட்டதால் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குவதை சேனல்கள் நிறுத்திக்கொண்டன. பின்னர் படம் வெளியான பிறகே சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குவோம் என அறிவித்தன.
இதனால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு இப்போது ஹிந்தி ரைட்ஸ் மூலம் கிடைக்கும் தொகை மிகப்பெரிய பலமாக மாறிவருகிறது. லைகா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் ஹிந்தி ரைட்ஸ் 20 கோடிக்கு விலைபோயிருக்கிறது.
தெலுங்கில் தற்போது சிரஞ்சவி நடித்து வரும் படத்தின் ஹிந்தி ரைட்ஸ் 30 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்து விரைவில் வெளியாக உள்ள நா பேரு சூர்யா நா இல்லு இண்டியா படத்தின் ஹிந்தி ரைட்ஸ் 22 கோடிக்கு விலைபோயிருக்கிறது.