இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். லாஸ்ஏஞ்சல்சில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கேரளாவின் சோகத்தை பாடினார்.
தனது புகழ்பெற்ற பாடலான “முஸ்தபா முஸ்தபா டோண்ட் ஒரி முஸ்தபா” பாடலை “கேரளா கேரளா டோண்ட் ஒரி கேரளா, காலம் நம் தோழன் கேரளா” என்று மாற்றி பாடினார். அந்த பாடலை கண்ணீருடன் ரசிகர்கள் கேட்டார்கள். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் கேரளாவின் பிரச்சினையை உலக அளவிற்க எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இதன் மூலம் உலக மக்கள் கேரளாவுக்கு உதவுவது அதிகரிக்கும் என்கிறார்கள்.
இதற்கிடையில் கேரளாவுக்கு நிதி திரட்ட ரகுமான் உலக சுற்றுப்பயண இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.