முல்லைத்தீவு (Mullaitivu) – கேப்பாபுலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கேப்பாப்புலவு மக்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் (Harini Amarasuriya) மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் வைத்து நேற்று (04) மாலை பிரதமரிடம் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளினை மீட்டுத் தருமாறு கோரி தமது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றினை வடமாகாண ஆளுநர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் கடந்த மாதம் ஒப்படைத்திருந்தனர்.
பிரதமரிடம் மகஜர் கையளிப்பு
அதனையடுத்து நேற்றையதினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை மக்கள் கையளித்திருந்தனர்.
இதேவேளை கேப்பாபுலவு மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்க கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.