விஜயகாந்த் காலமானார்: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் கடந்த நவம்பர் மாதம் உடல் நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து 24 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். இதனிடையே இன்று அதிகாலை விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக முன்னதாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில், “ மருத்துவ பரிசோதனையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது” என்று குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.