கேட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்பட்ட வரலாற்று மாளிகை.!
நோவ ஸ்கோசியா, நியுபோர்ட் லான்டிங்கில் ஒரு நூற்றாண்டு பழமையான மாளிகை ஒன்று ரொறொன்ரோ வீடொன்றின் சராசரி விலையை விட குறைந்த விலைக்கு பட்டியலிடப்பட்டடிருந்தது. அதனை தொடர்நது மிக வேகமாக சுழற்சி செய்யப்பட்டு பட்டியலிடப் பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
மவுன்ஸ் மாளிகை எனப்படும் இந்த மாளிகை 455,000 டொலர்களிற்கு விற்கப்பட்டதாக ரியல் எஸ்டேட் முகவர் வன்டா கிரேவ்ஸ் தெரிவித்துள்ளார். பட்டியலில் தெரிவிக்கப்பட்ட விலையிலும் பார்க்க 20,000டொலர்கள் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. இது ஒரு பல-சலுகை நிலைமை என முகவர் கூறினார்.
இந்த மாளிகையில் ஆர்வம் தெரிவித்து கனடா பூராகவும், யு.எஸ்., அயர்லாந் போன்ற தொலை நாட்டிலிருந்தும் தகவல்கள் வந்து சேர்ந்தது.
7,000-சதுர அடி கொண்டது. கனடாவிற்கு வெளியில் இருந்தும் வீட்டை பார்க்காமலே தங்கள் விருப்பறிவை கொடுத்திருந்தனர்.
இந்த எஸ்டேட் சமூகத்தில் ஒரு நிரந்தர தூணாக 1900லிருந்து இருந்துள்ளது.
இந்த மாளிகை ஒரு சோக கதையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
சொந்த காரரான தோமஸ் மவுன்ஸ் என்பவரின் சகோதரர் வீட்டின் கட்டுமான பணியை மேற்பார்வை செய்தார். இவர்களின் திருமண பரிசாக இந்த வீடு கட்டப்பட்டது. கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கையில் தோமசும் அவரது மனைவியும் இரண்டு வருடங்கள் தேன் நிலவு சென்றிருந்தனர்.
உலக பயணத்தின் போது ஏராளமான தளபாட வகைகள் மற்றும் ஏனைய பொருட்களை தங்கள் புதிய வீட்டை நிரப்ப வாங்கினர். கனடா திரும்பியதும் தோமசின் மனைவி காச நோயால் பாதிக்கப்பட்டு சில வருடங்களில் இறந்து விட்டார்.
1963ல் மரணமடையும் வரை தோமஸ் மாளிகையில் தனியாக வாழ்ந்துள்ளார்.