கேட்ச் பிடிப்பதில் கின்னஸ் சாதனை படைத்தார் கிரிக்கெட் வீரர் நாஸர்ஹூசைன்: வைரல் வீடியோ!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நாஸஹுசைன்,அவர் சமீபத்தில் 70 மீற்றருக்கு மேல் வேகமாக வந்த பந்தை பிடித்து சதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டி-20 தொடரில் பங்கேற்க இருக்கிறது.இதற்க்கான முதல் போட்டி லண்டன் மாநாகரில் வருகிற 14 ம் திகதி நடை பெறுகிறது.
மேலும் லண்டன் மைதானத்தில் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டார் நாஸ்ர்ஹூசைன்.
முதலில் 100 அடிக்கு மேல் இருந்து ஆளில்லா விமானம் மூலம் பந்து போடப்பட்டது, அது மணிக்கு 70 மீற்றர் வேகத்தில் வந்தது, இதை அவர் எளிதாக பிடித்தார், இதனால் உயரத்தை 150 அடிக்கு உயர்த்தினர் அங்கிருந்து பந்து போடப்பட்டது வந்த வேகத்தில் பந்து அவரது கையை சற்று பதம் பார்த்தது, இருந்தாலும் பந்தை விட வில்லை.
மற்றொரு முயற்சியாக 400 அடிக்கு உயர்த்தப்பட்டது, ஆனால் அந்த பந்தை அவரால் கணிக்க முடிய வில்லை பிடிக்காமலே விட்டுவிட்டார். பந்தை பிடிப்பதற்கு நாஸர்ஹூசைன் விக்கெட் கீப்பர் பயன்படுத்தப்படும் கை உறையை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அங்கிருந்த உலக கின்னஸ் அமைப்பாளர் ஒருவர் ,150 அடிக்கு மேல் வந்த பந்தை தவறவிடாமல் பிடித்ததால் இது ஒரு கின்னஸ் சாதனையாக அறிவித்து அதற்கான சான்றை நாஸர்ஹூசைனிடம் ஒப்படைத்தார்.