நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மேலும் 17 உயிரிழப்புகள் இடம்பெற்றிருப்பதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
11 ஆண்களும் 06 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர்.
அதன்படி இலங்கையில் கொவிட் காரணமாக இதுவரை பதிவான உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 14,901 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை முன்னதாக கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 248 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559,684 ஆக உயர்வடைந்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]