ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, தலைநகர் பாக்தாத்தில் உள்ள தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமின்றி தப்பியதாக தெரிவித்துள்ளார்.
தலைநகரின் பாதுகாப்பு வலயத்தில் உள்ள அவரது இல்லம், ஒரு கொலை முயற்சியில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் மூலம் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் காதிமி காயமின்றி தப்பினார்.
எனினும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் பிரதம அமைச்சரின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குறைந்தது ஆறு உறுப்பினர்கள் காயமடைந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
ஒரு டுவிட்டர் பதிவில் நலமாக இருப்பதை உறுதிபடுத்திய காதிமி, அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒக்டோபர் 10 ஆம் திகதி பொதுத் தேர்தல் முடிவுக்காக ஈராக் தலைநகரில் நடந்த கொடிய போராட்டங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த தாக்குதல் நடந்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]