கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் நேற்று மாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறத்த நோயாளர் அம்பாறை பகுதியைச் சேர்ந்த முகமட் ரிகாஸ் என்று பிரதிப் பொலிஸ்மா அதிருபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறித்து தகவல் அறிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.