கெஸ்பேவ, கஹாபொல பகுதியில் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து வீடுகளுக்கு சென்று, கொரோனா தொற்று நோயாளிகளை குணப்படுத்த முடியும் எனக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 நோயாளிகளை குணப்படுத்துவதாகக் கூறி இருவரும் தனிநபர்களிடமிருந்து 12,500 ரூபா வசூலித்ததாக கூறப்படுகிறது.
கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி அளித்த முறைப்பாட்டுக்கு இணங்கவே இந்த இருவரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்த குழு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு பயணிக்கும் என்று பேஸ்புக் பக்கத்தை இருவரும் பராமரித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் பயணித்த வேன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந் நிலையில் அவர்கள் இன்று கெஸ்பேவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.