இங்கிலாந்தைச் சேர்ந்த கென்னி ஓல்லெரென்ஷாவின் டாட்டூ உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை இவரது படத்தை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். டிரக் டிரைவரான கென்னி, தன் மார்பில் தானே ட்ரக் ஓட்டுவதுபோல டாட்டூ வரைந்துகொண்டிருக்கிறார். “இந்த வித்தியாசமான யோசனையை வழங்கியவர் டாட்டூ கலைஞர் ரிச்சர்ட் பேட்லிதான்.
அவரது கற்பனை வளம் என்னை ஆச்சரியப்படுத்திவிட்டது. நான் டிரைவர் என்றதும் இந்த யோசனையை எனக்குச் சொன்னார். எனக்கும் பிடித்துவிட்டது.
முதல்முறை இந்த டிசைனை வரைந்திருக்கிறார். 4 மணி நேரமானது. முதல் 3 மணி நேரம் வலி தெரியவில்லை. அடுத்த ஒரு மணி நேரம் இம்சையாக இருந்தது. ஆனால் வரைந்து முடித்தவுடன் என் மகன், நான் பிரபலமாகிவிடுவேன் என்று சொன்னபோது வலியெல்லாம் பறந்துவிட்டது. அவன் சொன்னதைப் போலவே இன்று நான் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டேன்.
ஃபேஸ்புக்கில் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் என் படத்தை லைக் செய்திருக்கிறார்கள். வெளியே சென்றால் எல்லோரும் பேசுகிறார்கள், வாழ்த்துகிறார்கள், என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். என்னைப் பிரபலமாக்கிய ரிச்சர்டுக்கு நன்றி” என்கிறார் கென்னி.
அடடே, ரசனையான டாட்டூ!