காலமாற்றத்தால் காணாமல் போன கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அவசியத்தைக் கூறும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ராஜவம்சம்’. கதிர்வேலு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குநர் சசிகுமார், நிக்கில் கல்ராணி ஆகியோர் நடித்திருக்கின்றன.
இந்தப் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. டீசரை, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டனர்.
‘என் குடும்பம் அம்பானி குடும்பம் இல்லடா. ஆனா, அன்பான குடும்பம் ‘ என்றும் ‘இந்த பூமியில பறவை, மிருகம் கூட கூட்டம் கூட்டமா வாழ்ந்திட்டு இருக்கு. ஆனா மனுஷங்கன்னு சொல்லிக்கிற நாம தான் குடும்பமா, கூட்டமா வாழ மறந்திட்டோம்’ என்றும் டீசரில் இடம்பெறும் வசனங்கள், கூட்டுக் குடும்பங்களின் தேவையையும், அதில் நிறைந்திருக்கும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.