தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கட்சித்தலைவர்களும் கலந்து கொண்ட இணையவழி கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர்கள் க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இதேவேளை என்.சிறிகாந்தாவும், மாவை சேனாதிராஜாவும் அதில் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இதன்போது காணி, அரசியல் கைதிகள், அடுத்த ஜெனிவா அமர்வுக்கான தயார்ப்படுத்தல்கள் பற்றி இதில் கலந்துரையாடப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]