வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் குவைத் நாட்டைச் சேர்ந்த தனவந்தர் ஒருவரின் உதவியுடன் பள்ளிவாசல் ஒன்று அமைக்கப்பட்டு வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் பங்குபற்றுதலுடன் திறந்து வைக்கப்பட்டது.
குவைத் நாட்டின் காலித் கமட் அல்காலித் ரகமத்துல்லா அவர்களின் நினைவாக தந்தையார் ஹமட் காலித் அவர்களின் நிதி உதவியில் குறித்த மஸ்ஜிதுல் அக்சா ஜீம்ஆப் பள்ளிவாசல் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
யுத்தம் காரணமாக கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக இடம்பெயர்ந்து தற்போது வவுனியா, புதிய சாளம்பைக்குளம் பகுதியில் குடியேறி வசிக்கும் மக்களினுடைய வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக குறித்த பள்ளிவாசல் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், அப் பள்ளிவாசலுக்கான வீதியும் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் குவைத் நாட்டைச் சேர்ந்த ஹமட் காலித், குவைத்தூதரக அதிகாரி, வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான், பிரதேச செயலாளர் கா.உதயராசா, பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.