சீனாவில் குரங்கு ஒன்று குழந்தையை கடந்த முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சீனாவின் தென்மேற்கு சோங்கிங் பகுதியில் வீட்டிற்கு வெளியே பதுங்கி இருந்த குரங்கு குழந்தையை இழுத்துச் செல்ல முயன்றபோது, அவ்வழியே சென்ற ஒருவர் குரங்கிடம் இருந்து குழந்தையை மீட்டுள்ளார்.
இந்நிலையில், வீட்டினுள் இருந்த தாய் சம்பவம் குறித்து அறிந்து பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கிருந்த சிசிரிவி காணொளியை பரிசோதித்த போது குறித்த சம்பவம் பதிவாகி இருந்துள்ளது.
குறித்த குரங்கு இதற்கு முன்னர் வயதானவர்களை தாக்கியதாகவும், இருப்பினும், ஒரு குழந்தை தாக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும் கிராமவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்கள்.
குரங்குகள் அருகில் உள்ள மலைகளில் இருந்து இறங்கி வருவதாகவும், தற்போது அவை கிராம மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குழந்தைக்கு ஒரு சில கீறல்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், பெரிய காயம் ஏற்படவில்லை எனவும், வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு தடுப்பூசி போடப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குரங்கை வனவிலங்கு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]