தினம் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்ற அறிவுரையை வயது வந்தவர்கள் பின்பற்ற முயற்சிக்கிறோம்.
குழந்தைகளுக்கோ தண்ணீரின் தேவையை உணர்கிற பக்குவம் இல்லை. அதனால், நீர்ச்சத்து தொடர்பான குறைபாடுகளால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.
அதிலும் வெயிலில் விளையாடுவதில் ஆசை கொண்ட குழந்தைகளுக்கு எளிதில் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுவிடுகிறது. இதை தவிர்க்க ‘முடிந்தபோதெல்லாம் அப்பிள் ஜூஸ் கொடுங்கள்’ என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.
குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிற Gastroenteritis என்கிற இரைப்பை குடல் அழற்சி பிரச்சினைக்கும் Dehydration என்ற உடல் வறட்சிக்கும் அப்பிள் ஜூஸ் அருமையான மருந்து என்று கூறியிருக்கிறார்கள்.
சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களை இழக்கும் நேரத்தில் அதை சமன் செய்யும் எலக்ட்ரோலைட்டாக அப்பிள் ஜூஸ் செயல்படுவதுதான் இதன் காரணமாம். இது பெரியவர்களுக்கும் சேர்த்துத்தான்.