பொகவந்தலாவ , கொட்டியாகலை கிழ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாகப் பாதிக்கபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதில் நான்கு பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளரும் பாதிக்கபட்டனர்.
தேயிலை மரத்திற்கு அடிப்பகுதியில் இருந்த குளவிக்கூட்டில் இருந்த குளவிகள் கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியதாக பாதிக்கபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.