குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பணியாற்றிவர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் கொலை, மொஹமட் சியாம் கொலை என்பவற்றின் விசாரணைகள் ஷானி அபேசேகரவின் தலைமையிலேயே நடைபெற்றன என்று கூறப்படுகின்றது.