குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி 5-வருடங்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த மனிதன் நாடு கடத்தப்படுதல்.
கனடா-ஜமேக்காவை சேர்ந்த மனிதரொருவர் ஐந்து வருடங்களாக குடிவரவு காவலில் வைக்கப்பட்டிருந்து தற்போது நாடு கடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
40வயதுடைய அல்வின் பிறவுன் செப்டம்பர் 7ந்திகதி கனடாவை விட்டு வெளியேறுவார் என ரொறொன்ரோ ஒன்ராறியோ சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
பிறவுனின் வழக்கறிஞர்கள் ஜமேக்கா இவருக்கு பயண ஆவணங்கள் வழங்க தவறியதால் இவரது நாடு கடத்தல் குறித்து சந்தேகம் கொண்டுள்ளனர் என அறியப்படுகின்றது.
தனது எட்டாவது வயதில் பிறவுன் கனடாவில் நிரந்தர வதிவுடைமை பெற்றவர்.
ஆறு பிள்ளைகளின் தந்தையான பிறவுன் 33-வருடங்களிற்கு முன்னர் கனடா வந்தார்.நிரந்தர வதிவுடமை பெற்ற பின்னர் போதை மருந்து, ஆயுதங்கள் சம்பந்தபட்ட 17 குற்றச்செயல்களிற்காக சிறை தண்டனை பெற்றார். சிறையில் இருந்து விடுதலை பெற்ற போதிலும் 2011ல் எல்லைப்புற அதிகாரிகள் இவரை நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காக தடுத்து வைத்து பின்னர் மீண்டும் நிபந்தனையின் கீழ் விடுதலை செய்தனர்.
தொடர்ந்து ஐந்து வருடங்களாக குடிவரவு தடுப்புக்காவலில் இருந்த பிறவுன் தனது தடுப்பு காவலை நியாயப்படுத்துமாறு கேட்க நினைத்தான்.
கடந்த மாதம் குடிவரவு கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.