சம காலத்தில் மின்சார உற்பத்தியில் சோலார் கலங்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு குறைந்த செலவு மற்றும் விரைவாக உற்பத்தி செய்யக்கூடிய முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியிருந்தனர்.
இம் முயற்சியில் விஞ்ஞானிகள் குழு ஒன்று வெற்றியடைந்துள்ளது.
இவை முற்றிலும் வர்த்தக நோக்கத்திலேயே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றன.
ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும், அதேவேளை 10,000 மணித்தியாலங்கள் வரை பயன்படுத்தவும் முடியும்.
குறித்த விஞ்ஞானிகள் குழு 10×10 cm அளவிடையில் வெற்றிகரமாக சோலார் கலத்தினை முப்பரிமாண பிரிண்ட் செய்துள்ளது.
குறித்த சோலார் கலத்தின் படம் வெளியிடப்பட்டுள்ளது.