முட்டை விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் முட்டை விலை குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் முன்னெடுத்த கலந்துரையாடலை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், கால்நடை வைத்தியர் சங்கம், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம், மற்றும் ஏனைய உணவு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கோழி தீன் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை விலையை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதன்மூலம், ஒரு முட்டையின் விலை 60 ரூபா முதல் 70 ரூபா வரை விற்கப்படுவதாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதேவேளை, முட்டை உற்பத்தியாளர்கள் விலையை குறைக்காவிட்டால் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.