சர்ஜுன் இயக்கத்தில் வெளியான ‘லக்ஷ்மி’ குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் குறும்படம் கௌதம் ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ யூ-ட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது. சர்ஜுன் இயக்கிய இந்தப் படத்தில் லக்ஷ்மி ப்ரியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் மீதான விமர்சனங்களால் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. பெண்களின் வெளி, பாலியல் சுதந்திரம் ஆகியவை பற்றிப் பேசுவதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அபத்தமான காட்சிகள் இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இணையத்தில் வெளியாகும் படங்கள் இணைய உலகம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் அதன் மூலம் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் பல்வேறு விதமான தகவல்கள் அதைப் பயன்படுத்துவோரைச் சென்றடைகின்றன. ஆபாசப் படங்களுக்கு கட்டுப்பாடுகள் வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.
சமீப காலமாக வெப் சீரிஸ் என்பது பரவி வருகிறது. பல முன்னணி பட நிறுவனங்களும் அப்படிப்பட்ட வெப் தொடர்களைத் தயாரித்து யூ-ட்யூபில் வெளியிட்டு வருகின்றன. பல குறும்படங்களையும் தயாரித்து வெளியிட்டு வருகின்றன. இயக்குனர் கௌதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மென்ட்டில் இப்போது வெளியிடப்பட்டுள்ள லட்சுமி என்ற குறும்படம் தற்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குறும்படத்தில் பாரதியாரின் பாடலைப் பயன்படுத்தியிருப்பது தற்போது சமூக வலைதளத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதியார் எப்போது தவறான காதலை ஆதரித்துள்ளார் என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதை வைத்துப் பலர் மீம்களும் உருவககி வருகிறார்கள்.