குருநாகல் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்போது இடம் பெற்று வருகின்றது.
காலை 8.30 மணியிலிருந்து மாலை 3 மணி வரையிலும் குறிப்பிட்ட அரச வைத்தியசாலைகளில் தடுப்பூசி போடும் நடவடிக்கை முன்னெடுப்பட்டு வருகின்றது.
குருநாகல் பிரதான வைத்தியசாலை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலை, கல்கமுவ தள வைத்தியசாலை, தம்பதெனிய தள வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.