இந்தோனேஷியாவில் கொமாடோ என்ற ராட்சதப் பல்லி நன்கு வளர்ந்த குரங்கு ஒன்றை முழுமையாக விழுங்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
கொமாடோ டிராகன் என்ற ராட்சதப் பல்லியினம் உலகிலேயே இந்தோனேஷியக் காடுகளில் மட்டுமே வசிக்கின்றன. இந்த நிலையில் சில ஆய்வாளர்கள் கொமாடோ குறித்து ஆராய்ந்து வந்தனர்.
அப்போது மரத்தின் அடியில் உறங்கிக் கொண்டிருந்த அனுமன் மந்தி என்ற குரங்கை 10 அடி நீளமுள்ள பல்லி ஒன்று பிடித்தது. பின் அந்தக் குரங்கு மயக்க நிலையில் இருக்கும்போதே முழுமையாக விழுங்கியது.