குயின் எலிசபெத் உயர்- ஆக்கிரமிப்பு பாதைகள் இன்று முதல் கட்டணமற்ற உயர் ஆக்கிரமிப்பு பாதைகளாக மாறுகின்றன.
ரொறொன்ரோ-இன்றிலிருந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகளுடனான வாகனங்கள் உயர் ஆக்கிரமிப்பு “HOV” பாதைகளில்16.5கிலோமீற்றர் நீட்டத்தில் குயின் எலிசபெத்வேக்கும் ஓக்விலில் உள்ள டிரவல்கார் வீதி வரை மற்றும் பேர்லிங்ரனில் குவெல்ப் பாதைவரை உபயோகிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்றிலிருந்து தனி ஒருவருடனான வாகனங்கள் மேற்குறிப்பிட்ட பாதைகளை டிசம்பர் 31 வரை உபயோகிக்கலாம் எனவும் ஆனால் சாரதிகள் 180 டொலர்களிற்கான அனுமதி வாங்க வேண்டும்.ஆனால் ஆக 500அனுமதிகள் மட்டும் சீரற்ற சீட்டிழுப்பில் வழங்கப்படும். அனுமதிக்கு 3,400ற்கும் மேற்பட்ட சாரதிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இரண்டிற்கும் மேற்பட்ட பயணிகளுடனான வாகனங்கள் இப்பாதைகளை இலவசமாக உபயோகிக்கலாம்.பச்சை ஒன்ராறியோ லைசென்ஸ் தகட்டு வாகனங்கள்- கூடுதல் கலப்பின மின்சாரம் மற்றும் பற்றறியில் இயங்கும் வாகனங்களிற்காக வழங்கப்பட்ட-HOT பாதைகளை உபயோகிக்கலாம்.பேரூந்துகள் வாடகை கார்கள் லிமோக்கள் மற்றும் அவசர சேவைகள் வாகனங்களும் HOTலேன்களை உபயோகிக்கலாம்.
இத்திட்டம் அவசர-நேர போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதவும் என கூறப்படுகின்றது.