நீர்வரத்து ஏற்பட்டு, நீர்வீழ்ச்சியில் கற்கள், மரங்கள் விழுந்து வருவ தால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் உள்ள கும்பக்கரை அருவி யில் வருடம் முழுவதும் நீர்வரத்து இருக்கும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த 2 மாதங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் 3 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை
யினர் தடை விதித்துள்ளனர். தற்போது நீரின் அளவு அதிகமாக இருப்பதாலும், கற்கள், மரங்கள் விழுவதாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படு வார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.