37 வயதுடைய பெண்ணின் உடலம் ஒன்று, ஒரு குடியிருப்பின் பெரிய குப்பைத் தொட்டிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பரிஸ் பதினைந்தில் உள்ள Boulevard Quinet – Rue Delambre ஆகியவற்றிற்கிடையில் அமைந்துள்ள square Delambre குடியிருப்புக் கட்டடத்தின் குப்பைத்தொட்டிக்குள் இருந்து, காவற்துறையினரால் இந்த உடலம் மீட்கப்பட்டள்ளது. பரிசின் மொன்பர்னாஸ் பகுதிக்கு அருகிலேயே இந்தக் கட்டடம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட பெண்ணுடன் வசித்து வந்த 34 வயதுடையவர் ஒருவர், கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பல குற்றச்செயல்கள் புரிந்து காவற்துறையினரின் குற்றப்பட்டியலில் உள்ளவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பெண்ணிண் சகோதரி, அவருடன் தொடர்பு எடுக்க முயன்றும் பல நாட்களாக எந்தத் தகவலும் இல்லாததால் காவற்துறையினரின் உதவியை நாடியிருந்தார். அதே நேரம் குப்பைத் தொட்டிக்குள் இருந்த உடலமும் நாற்றமடிக்கத் தொடங்கி உள்ளது. ஒரு குப்பைத்தொட்டியைக் காணவில்லை என அந்நதக் கட்டத்தின் நிர்வாகக் காவலாளியும் காவற்துறையினரிடம் தகவல் தெரிவித்திருந்தார்.
இந்தப் பகுதி காவற்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரை காவற்துறையினர் அந்த இடத்தில் நின்றுள்ளனர்.