குத்துச்சண்டை வீரர் முகமது அலிக்கு வரும் வெள்ளிக்கிழமை இறுதி சடங்கு
குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் இறுதி சடங்கு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அவரது குடும்ப செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
குத்துச்சண்டை வீரர் முகமது அலிக்கு வரும் வெள்ளிக்கிழமை இறுதி சடங்கு: பில் கிளிண்டன் உரையாற்றுகிறார்
பீனிக்ஸ்:
அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74.
கடந்த 1980-ல் பார்கின்சன் நோயால் முகமது அலி பாதிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நுரையீரல் மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) சுவாசம் சார்ந்த பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் அவரை அமெரிக்காவின் போனிக்ஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முகமது அலிக்கு நீண்ட நாட்களாக சிகிச்சை அளித்து வந்த பார்கின்சன்ஸ் சிறப்பு மருத்துவர் ஆப்ரகாம் லிபர்மென், அலியின் உடல் நிலை தொடர்பாக கருத்து கூற மறுத்துவிட்டார். இந்நிலையில், அவரது உயிர் நேற்று (சனிக்கிழமை) பிரிந்தது.
இந்நிலையில், முகமது அலியின் இறுதி சடங்கு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அவரது குடும்ப செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முகமது அலியின் குடும்பத்தில் இருந்து மரணத்திற்கு பிறகு வரும் முதல் அறிவிப்பு இதுவாகும். வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கே.எஃப்.சி யம் அருகில் நடைபெறும். பொதுமக்களுக்கு இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி உண்டு,
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றுகிறார்.