கிளிநொச்சி, இயக்கச்சி சங்கத்தார்வயல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
யாழ். பருத்தித்துறை பிரதேசத்தைச் சேரந்த 35, 25, 19 வயதுடைய மூன்று ஆண்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். குடும்பத் தகராறே இச்சம்பவத்துக்கான காரணம் எனத் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்