பண்டாரகமை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் பெற்று விற்பனையில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் பண்டாரகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 6 இலட்சம் ரூபாவிற்கு அதிகம் பெறுமதியான 28 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணையில் இப் போதைப்பொருட்கள் குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாணந்துறை ‘குடுசலிந்து’ என்ற சலிந்து மல்ஷித குணரத்னவிற்கு சொந்தமானது எனவும் அவற்றை விற்பனை செய்வதற்காக பொதிகளாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பண்டாரகமை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த 52 கிலோ நிறையுடைய போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளமை விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான ‘குடுசலிது’ பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பண்டாரகமை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.