குடிவரவு ,அகதிகள் செலாக்க மையத்தை இடம்மாற்றுவதற்கு அல்பேட்டா மேயர் எதிர்ப்பு
கனேடிய மத்திய குடிவரவு மற்றும் அகதிகள் செலாக்க மையத்தை இடம்மாற்றுவதற்கு எதிராக போராடப் போவதாக அல்பேட்டா நகர மேயர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மத்திய குடிரவு மற்றும் அகதிகள் செயலாக்க மையத்தினை, எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு எட்மன்டனுக்கு இடமாற்றம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த மையம் அமைந்துள்ள இடத்தின் குத்தகை காலாவதியாகவுள்ள நிலையில் இவ்வாறு இடம்மாற்றம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் குடிவரவு மற்றும் அகதிகள் செலாக்க மையத்தை இடம்மாற்றுவதால் சுமார் 200 வேலையிழப்புக்கள் ஏற்படும் என்பதுடன் சுற்றியுள்ள 6 ஆயிரம் நகரங்கள் நாசமாகிவிடும் என்று அல்பேட்டா நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த இடம்மாற்றம் குறித்து மத்தியதுறை அதிகாரிகள் தனக்கு அறிவிக்கவில்லை எனவும் அநாமதேய அழைப்பு ஒன்றின் மூலமே இவ்விடயத்தை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.