கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவருடைய மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு பவித்ரா, சுனில், அனில் என்று 3 குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில், பசவராஜ் மதுவுக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது.
குடித்துவிட்டு வந்து தினமும் ஜெயஸ்ரீயுடன் பசவராஜ் சண்டை போட்டுள்ளார்.
குடும்ப செலவிற்கும் பணம் தராததால் ஜெயஸ்ரீ மனமுடைந்தாக கூறப்படுகிறது.
இதனால், கணவருடன் வாழ பிடிக்காத அவர் தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மன விரக்தியுடன் இருந்த ஜெயஸ்ரீ தனது மகள், மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி, நேற்று அதிகாலை தனது பிள்ளைகளை வீட்டில் இருந்த கிணற்றில் ஜெயஸ்ரீ தள்ளினார். தண்ணிரில் மூழ்கிய குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர்.
அதன் பின்னர், ஜெயஸ்ரீயும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து ஜெயஸ்ரீ உள்பட 4 பேரின் உடல்களை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுவினால், தாய், குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.