இந்தியாவின் குஜராத்தின் அஹமதாபாத் விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சில நாட்களின் பின்னர் நான்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்தியாவின் குஜராத்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுவதற்காக சந்தேகநபர்கள் அஹமதாபாத் வரவுள்ளனர் என்ற தகவல் கிடைத்த பின்னர் இவர்களை கைதுசெய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்களை ஏற்படுத்தியதாக குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் சென்னையிலிருந்து அஹமதாபாத் புறப்பட்ட இன்டிகோ விமானத்தில் புறப்பட்டனர் என குஜராத் பொலிஸ் அதிகாரி விகாஸ் சகாய் தெரிவித்துள்ளார்.
தென்பகுதியிலிருந்து வரும் பயணிகள் பட்டியலை சோதனை செய்த பின்னர் இவர்களை கைதுசெய்தோம் கொழும்பில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இவர்களின் விபரங்களை உறுதி செய்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் நால்வரும் சமூக ஊடகங்கள் ஊடாக அபு என்ற பாக்கிஸ்தானை சேர்ந்த நபருடன் தொடர்பிலிருந்துள்ளனர்.
இவர்களை இந்தியாவில் தாக்குதலை மேற்கொள்ளுமாறு அபு தூண்டினார் அவர்கள் மிக அதிகளவிற்கு தீவிரவாதமயப்படுத்தப்பட்டிருந்ததால் தற்கொலை தாக்குதலை மேற்கொள்ள தயாராகயிருந்தனர் என குஜராத்தின் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அபு அவர்களிற்கு பணம் வழங்கியுள்ளார்எனவும் அவர் தெரிவித்துள்ளார்
சந்தேகநபர்களின் கையடக்க தொலைபேசிகளை ஆராய்ந்தவேளை சில ஆயுதங்களின் படங்களை கண்டுபிடித்துள்ளோம்இஅஹமதாபாத்திற்கு அருகில் உள்ள நனச்சிலோடா என்ற இடத்தின் விபரங்களும் காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இவர்களின் கையடக்கதொலைபேசியில் குறிப்பிடப்பட்ட நனச்சிலோடா என்ற இடத்தில் பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளோம் பாக்கிஸ்தானை சேர்ந்த நபரே இந்த ஆயுதங்களை ஏற்பாடுசெய்துள்ளார் என குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புரோட்டன் மெயில் ஊடாக இவர்கள் பாக்கிஸ்தானில் உள்ள அந்த நபருடன் உரையாடியுள்ளனர் எனவும் குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களான முகமட்நஸ்ரட் ( 33) முகமட் பாரிஸ் ( 35) முகமட் நவ்ரான்( 27)முகமட்ரஸ்தீன் ( 47) ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர் இவர்கள் யூதர்கள் கிறிஸ்தவர்கள் பாஜகவினர் ஆர்எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர்களிற்கு பாடம் கற்றுக்கொடுக்க விரும்பினார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.