ஒரு பெண் கர்ப்பமானதும் சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் முதல் டிப்ஸ் குங்குமப்பூ கலந்த பாலை தினமும் குடிக்க வேண்டும் என்பதுதான். அப்படி குடித்தால் தான் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று பலரும் கருகிறார்கள்.
ஈப்போதெல்லாம் என்ன குழந்தை பிறந்துள்ளது? என்பதற்கு அடுத்த கேள்வியாக குழந்தை என்ன நிறத்தில் பிறந்துள்ளது? என்று தான் பலரும் கேட்கிறார்கள். அந்த அளவுக்கு நிறத்தின் மீதான ஆர்வம் எல்லோருக்கும் அதிகரித்துள்ளது. நிறம் பற்றிய கேள்வி வரும் போது தான் சிவப்பு தங்கம் என்று அழைக்கப்படும் குங்குமப்பூ பற்றிய பேச்சும் எழுகிறது. குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என நம்பப்படுகிறது.
ஒரு பெண் கர்ப்பமானதும் சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் முதல் டிப்ஸ் குங்குமப்பூ கலந்த பாலை தினமும் குடிக்க வேண்டும் என்பதுதான். அப்படி குடித்தால் தான் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று பலரும் கருகிறார்கள். சீமந்த விழாவில் குங்குமப்பூவை கொடுக்கும் அளவிற்கு இந்த நம்பிக்கை ஆழமாக பதிந்துள்ளது. உண்மையில் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். இதற்கு மருத்துவர்களின் பதில் நோ என்பதே.
உண்மையில் குழந்தையின் நிறத்தை தீர்மானிப்பது பெற்றோரின் மரபணுக்களும், மெலனில் சுரப்பியும் தான். சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாப்பது இந்த லெமனில் தான். யாருக்கு உடலில் லெமனில் அதிகமாக சுரக்கிறதோ அவர்களுக்கு கருப்பாகவும், மெலமனின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு சிவப்பாகவும் குழந்தை பிறக்கும் என்கின்றனர்.
ஆகவே நிறத்திற்கும், குங்குமப்பூவிற்கும் ஒரு துளி அளவு கூட சம்பந்தம் இல்லை என்பதே உண்மை. ஆனால் கர்ப்பிணிகளுக்கு பல வகைகளில் இந்த குங்குமப்பூ மருத்துவ ரீதியில் உதவியாக இருக்கிறது. பாலில் குங்குமப்பூவை கலந்து பருகினால் அதன் மணமும் சுவையும் வாந்தி எடுக்கும் உணர்வை கட்டுப்படுத்துகிறது. மேலும் பசியையும் தூண்டுகிறது. ஐந்தாம் மாதம் முதல் கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிட தொடங்கலாம்.
உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப்பொருளாகவும் இது உள்ளது.
குங்குமப்பூவின் சுவையும் மணமும் கவர்ந்து இழுக்கக்கூடியது. ஆகவே கர்ப்பிணிகளுக்கு இதன் மீது ஈர்ப்பு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதில் சந்தேகமே இல்லை.
குங்குமப்பூக்கும் குழந்தையின் நிறத்துக்கும் தான் தொடர்பில்லையே தவிர இவற்றில் பலவித நன்மைகள் அடங்கியுள்ளன.
சிலர் தங்கள் குழந்தை நல்ல சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூவை அதிகளவில் சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு ஆபத்தானது. நாள் ஒன்றுக்கு பத்து கிராமுக்கு மேல் குங்குமப்பூ எடுத்துக்கொண்டால் அது ஆபத்துதான். பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மருத்துவரின் அறிவுரையின் படி உட்கொள்வதே சிறந்தது.