குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்று திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டுள்ளதால், தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.