சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் வேண்டுகோளுக்கிணங்க பிரயாணக் கட்டுப்பாடு வரையறை தளர்த்தப்பட்டாலும் கிழக்கில் உக்கிரமடைந்து வரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் உள்ளூர் மற்றும் பிரதான வீதிகளில் களப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மக்களின் சுகாதார நலன்கருதி சந்தைகள், பொது இடங்கள் மற்றும் பொது வீதிகள் போன்ற இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மேற்பார்வை குழு நியமிக்கப்பட்டு களச் செயற்பாடுகள் நாளந்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இக்களப்பணிக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி குழுவும் கலந்து கொண்டு சுகாதார வழிமுறைகளை கண்காணித்து வருகின்றனர்.