கிழக்கு மாகாண ஆளுநர் பதவியினை மாற்றம் செய்யக்கோரி கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் பெயரில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கிழக்கு மாகாணத்தின் தமிழர் பிரதேசங்களில் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர் பகுதிகள் முழுமையாக முடங்கியுள்ளது.
மட்டக்களப்பு நகரில் உள்ள தமிழர்களின் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதுடன் வங்கிகள் மற்றும் நிறுவனங்களும் பூட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
பாடசாலைகள் இயங்கிய போதும் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை என தெரியவருகிறது.
வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டிருந்த நிலையில் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டிருந்து. பின்னர் பொலிசாரின் தலையீட்டால் டயர்கள் அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் வாழைச்சேனை கிண்ணையடி சந்திவெளி முறக்கெட்டாஞ்சேனை வந்தாறுமூலை உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக முடங்கியுள்ளதுடன் ஆரையம்பதி களுவாஞ்சிகுடி பட்டிருப்பு உள்ளட்ட பகுதிகளும் முழுமையாக முடங்கியுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இதேநேரம் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருமலை ஆகிய மாவட்டங்களில் பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் இன்று காலை மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் டயர்கள் எரிக்கப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது பின்னர் பொலீஸாரின் தலையீட்டால் மீண்டும் போக்குவரத்து வழமை நிலைக்கு நிரும்பியுள்ளதுடன் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.