கிளிநொச்சி அம்பாள்குளத்திலிருந்து இன்று பகல் இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீராட சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாங்குளம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ரகு என்ற இளைஞன் ஊற்றுப்புலம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.