கிளிநொச்சி, இரணைமடு நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர், கிளிநொச்சி திருவையாறு வில்சன் வீதியை சேர்ந்த கே.ரமேஸ்குமார் எனவும், அவருக்கு வயது 30 எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த நபர், தனியார் வீதி அபிவிருத்தி நிறுவனம் ஒன்றில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுப்பட்டவர் எனவும் நேற்றுமாலை(24.05.2021) குளிப்பதற்காக வாய்க்காலிற்கு சென்றபோது நீரில் மூழ்கி மரணித்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த, மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.