கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணியளவில் 37 வயதுடைய 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது 17 வயதுடைய மகளும் தீயில் எரிந்து கருகிய நிலையில் சடங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தீயில் கருகிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்ட இடத்திற்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் அதேவேளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]