கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க புதிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமர்விலிருந்து மற்றுமொரு நீதிபதி வியாழக்கிழமை (16) விலகியதளையடுத்து புதிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று வியாழக்கிழமை (16) நீதிபதிகள் ரி என். சமரக்கோன் மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போதே இந்த மனு மீதான விசாரணையிலிருந்து விலகுவதாக நீதிபதி நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
இதன்படி, மனு விசாரணைக்கு புதிய நீதிபதிகள் குழுவொன்றை பெயரிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்னவுக்கு உரிய மனு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன முன்னிலையில் புதிய பீடமொன்றை பெயரிடுமாறு கோரப்பட்டது.
இதன்படி, சோபித ராஜகருணா மற்றும் ரி. என்.சமரக்கோன் ஆகியோர் அடங்கிய புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இது தொடர்பான மனு பரிசீலிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையில் இருந்து இதுவரை 3 நீதிபதிகள் விலகியுள்ளனர்.